

ஜோகன்னஸ்பர்க்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேனான ஜேபி டுமினி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கப்பட்ட டுமினி, உள்ளூர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். மேலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டுமினி தென் ஆப்பிரிக்க அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளிலும், முதல் தர போட்டியில் வெஸ்ட் கேப் கோப்ராஸ் அணிக்காக 108 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டுமினி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.