ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; இறுதிப்போட்டியில் வங்காளதேசம்-யுஏஇ அணிகள் இன்று மோதல்...!

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @ACCMedia1
Image Courtesy: @ACCMedia1
Published on

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதையடுத்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் வங்காளதேச அணி இந்தியாவையும், யுஏஇ அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

வங்காளதேசம் - யுஏஇ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com