ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

இலங்கை - இந்தியா இடையிலான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
image courtesy: twitter/@ACCMedia1
image courtesy: twitter/@ACCMedia1
Published on

ஷார்ஜா,

8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு) இலங்கை , வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்தியா முதலில் பந்து வீசுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com