ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு


ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி:  டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
x

image courtesy: ICC

தினத்தந்தி 2 Feb 2025 11:45 AM IST (Updated: 2 Feb 2025 12:05 PM IST)
t-max-icont-min-icon

இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் கோலாலம்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா உடன் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.

1 More update

Next Story