ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா - மலேசியா இன்று பலப்பரீட்சை

image courtesy: ICC
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
கோலாலம்பூர்,
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை பந்தாடி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. கோலாலம்பூரில் மதியம் 12 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது.
இதே பிரிவில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.






