ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை : சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி வெற்றி

இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கோங்கடி த்ரிஷா சதமடித்து அசத்தினார் . ஜி கமலினி அரைசதமடித்தார்.
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை : சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி வெற்றி
Published on

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இதன்படி குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளை (லீக் சுற்றில் 4 புள்ளிகள்) பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காலாந்துடன் இன்று மோதியது .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார் அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்கம் முதல் இந்திய அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர் .  இதனால்       20ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கோங்கடி த்ரிஷா சதமடித்து அசத்தினார் . ஜி கமலினி அரைசதமடித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . இதனால் அணி 14 ஓவர்களில் 58 ரன்களுக்கு ஸ்காட்லாந்து அணி ஆட்டமிழந்தது. இதனால் 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com