ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: மீண்டும் கோப்பையை வெல்லுமா இந்தியா..? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

இந்திய அணி இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கோலாலம்பூர்,
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தையும், தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இதில் கோலாலம்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை (பகல் 12 மணி) சந்திக்கிறது.
இந்திய அணி இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே உத்வேகத்துடன் இன்றையா ஆட்டத்திலும் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை வெல்லுமா? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மறுபுறம் முதல் முறையாக இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்க அணியும் கோப்பையை வெல்ல போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.






