"ராகுல் டிராவிட்டைப்போல''...- கே.எல்.ராகுல் சதம் விளாசியது குறித்து முகமது கைப் பெருமிதம்

இன்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுல் 112 ரன்கள் குவித்தார்.
சென்னை,
இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், கே.எல். ராகுல் (112*) சதம் விளாசி அசத்தினார்.
ரோகித் சர்மா 24 ரன்கள், விராட் கோலி 23 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்கள் என சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் கே.எல். ராகுல் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 92 பந்துகளைச் சந்தித்த அவர், 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்களைக் குவித்தது. இருப்பினும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில், கே.எல்.ராகுல் சதம் விளாசியது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
"ராகுல் டிராவிட்டைப் போலவே, கே.எல். ராகுலுக்கும் கடினமான பொறுப்புகள் கிடைக்கின்றன. அவர் இன்றைய போட்டியில், பொறுப்புடன் ஆடி சதம் அடித்துள்ளார். அவர் எப்போதும் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறார்" என்றார்.






