

பெங்களூரு ,
நேற்று நடைபெற்ற 19-வதி ஐபிஎல் சீசனின் தொடக்கப் போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
இந்த போட்டியின் மூலம் ஐபிஎல்லில் அறிமுகமான ஜேக்கப் டப்பி 3 விக்கெட் வீழ்த்தி “மேன் ஆப் தி மேட்ச்” விருதை வென்றார். இப்போட்டிகு பின் பேசிய அவர், தனது இந்த பெர்பார்மன்ஸ்க்கு ஹேசல்வுட் அளித்த வழிகாட்டுதலும், தொடர்ந்து ‘ஹார்டு லெங்க்த்’ பந்து வீசியதுமே காரணம் என தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “ஹார்டு லெங்க்தில் தொடர்ந்து பந்து வீசுவதே என் திட்டம். இதுதான் என் பெர்பாமன்சுக்கு காரணம். இந்தியாவில் இப்படி ஒரு பவுன்ஸ் நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்றார். மேலும், கேப்டன் ரஜத் படிதார் தன் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி தெரிவித்தார்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 202 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியில் விராட் கோலி 69 ரன்கள், படிக்கல் 61 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இறுதியில் பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 200-க்கு மேற்பட்ட ரன்களை அதிவேகமாக சேஸ் செய்த சாதனையையும் படைத்தது.