துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கபில்தேவ் சந்திப்பு


துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கபில்தேவ் சந்திப்பு
x

Image Courtesy: @Udhaystalin

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்துள்ளார்.

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் உடனான சந்திப்பு அருமையாக இருந்தது. அவரது பயணம் நம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது.

விளையாட்டுத் துறையில் தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளை திரு கபில்தேவ் பாராட்டினார். கிரிக்கெட்டைத் தாண்டி, குறிப்பாக கோல்ப் விளையாட்டை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story