

லக்னோ,
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் லக்னோ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சென்னை அணியில் ருதுராஜ் 13 ரன்கள் , சாம்சன் 20 ரன்கள் , உர்வில் படேல் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் கார்த்திக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த அவர் அரைசதம் அடித்து 71 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 32 ரன்கள் எடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.லக்னோ அணியில் ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.