திருப்பூர் வழியாக காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரெயில் இயக்கம்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரெயில்
சிறப்பு ரெயில்
Published on: 

திருப்பூர்,

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கோவை-பனாரஸ் (வண்டி எண்.06047) சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு பனாரசை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு மாலை 6.40 மணிக்கு வந்து 6.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக பனாரஸ்-கோவை (06048) சிறப்பு ரெயில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி இரவு 10.30 மணிக்கு பனாரசில் இருந்து புறப்பட்டு திங்கட்கழமை இரவு 11.55 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு இரவு 10.10 மணிக்கு வந்து 10.15 மணிக்கு புறப்படும்.

கோவை-பனாரஸ் (06053) சிறப்பு ரெயில் வருகிற 5-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு பனாரசை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு மாலை 6.40 மணிக்கு வந்து 6.45 மணிக்கு புறப்படும். பனாரஸ்-கோவை (06054) சிறப்பு ரெயில் வருகிற 11-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு பனாரசில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு திங்கட்கிழமை இரவு 11.20 மணிக்கு வந்து 11.25 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

X