மகளிர் உலக கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணையித்தது இந்தியா

மகளிர் உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 282 ரன்களை இந்தியா நிர்ணையித்துள்ளது.
மகளிர் உலக கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணையித்தது இந்தியா
Published on

டெர்பி,

8 அணிகள் இடையிலான 11வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்த நிலையில் இன்று நடைபெறும் 2வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மழை காரணமாக இந்த போட்டி தற்போது தாமதம் ஆனது. இதையடுத்து போட்டி 42 ஓவர்களாக குறைக்கபட்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி வீராங்கனைகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக ஹர்மன்பிரீத் கவுர் 114 பந்துகளில் 169 ரன்கள் குவித்தார். இந்திய கிரிக்கெட் அணி நிர்ணையிக்கப்பட்ட 42 ஓவர்கள் முடிவில் 281 ரன்கள் குவித்ததுள்ளது. இதையடுத்து 282 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com