காவ்யா மாறன் என்னை திருமணம் செய்து கொள்வாயா? - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் லீக்கில் நடந்த ருசிகர சம்பவம் - வீடியோ...!

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 20 ஓவர் லீக்கில் காவ்யா மாறனுக்கு ரசிகர் ஒருவர் வித்தியாசமான கோரிக்கை வைத்துள்ளார்.
காவ்யா மாறன் என்னை திருமணம் செய்து கொள்வாயா? - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் லீக்கில் நடந்த ருசிகர சம்பவம் - வீடியோ...!
Published on

போலாந்த்,

ஐபிஎல்லில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரும், சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கு நீண்ட நாட்களாகவே பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடும் போது, போட்டியை பார்ப்பதை விட ரசிகர்கள் காவ்யா மாறனின் ரியாக்சனை தான் பார்ப்பார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் கூட காவ்யா மாறன் படு சிறப்பாக செயல்படுவார். எந்த அளவுக்கு அழகு இருக்கிறதோ, அதே அளவிற்கு அறிவையும் பயன்படுத்தி ஏலத்தில் மற்ற அணிகளுக்கு ஆட்டம் காட்டியவர் காவ்யா மாறன். இந்த நிலையில், காவ்யா மாறனின் புகழ் கடல் தாண்டி தென்னாப்பிரிக்கா வரை சென்றது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி உள்ளது. இந்த நிலையில் ஈஸ்டர்ன் கேப் அணி பார்ல் ராயல்ஸ் அணியுடன் இரு தினங்களுக்கு முன்னர் போலாந்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. அப்போது ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யும் போது 8 ஓவர் முடிவில் 60 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த போது தான், கூட்டத்தில் இருந்த வெளிநாட்டு ரசிகர் ஒருவர், காவ்யா மாறனுக்கு கல்யாண புரபோஷலை கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த ரசிகர் தனது கையில் காவ்யா மாறன் என்னை திருமணம் செய்து கொள்வாயா? என எழுதப்பட்டிருந்த பதாகையையுடன் இருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com