கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை

image courtesy:instagram/klrahul
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
புனே,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல். ராகுல் தனது நீண்ட நாள் காதலியான இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டியை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இருவருக்கும் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை பிறப்பை முன்னிட்டு கே.எல்.ராகுல் நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






