6வது வரிசையில் கே.எல். ராகுல் களமிறங்குவது அணிக்கு சிறந்தது: பேட்டிங் பயிற்சியாளர்

6வது வரிசையில் கே.எல். ராகுல் களமிறங்குவது அணிக்கு சிறந்தது என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.
துபாய்.,
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் 6வது பேட்டிங் வரிசையில் களமிறங்கி வருகிறார் . 5வது வரிசையில் அக்சர் படேல் களமிறங்குகிறார் .இந்த நிலையில், 6வது வரிசையில் கே.எல். ராகுல் களமிறங்குவது அணிக்கு சிறந்தது என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அவர் ஓப்பனிங் செய்யக்கூடியவர், 4 ,5, 6-வது வரிசையில் விளையாடக்கூடியவர், அணிக்கு தேவையானதை செய்வார் . அவர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.. வேறு ஒரு வரிசையில் களமிறங்கி அபாரமாக விளையாடும்போது அவருக்கு உதவுகிறது, ஏனென்றால் அவர் செல்லும் சூழ்நிலை வேறுபட்டது. எனவே, அது அணிக்கும் சிறந்தது. என கூறினார்.






