ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... பண்ட், டுமினியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

டெல்லி அணிக்காக வேகமாக 1,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை...  பண்ட், டுமினியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்
Published on

சென்னை,

வெவ்வெறு ஐபிஎல் அணிகளுக்காக 1,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை டெல்லி கேபிடல்ஸ் வீரர் கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.

நேற்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியின்போது இந்த வரலாற்று மைல்கல்லை அவர் எட்டினார்.

ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக தலா 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2,548, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகாக 1,410 , மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகாக 1,006 ரன்களை கடந்துள்ளார்.

மேலும், இந்த போட்டியில் அவர் 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், டெல்லி அணிக்காக மிக வேகமாக 1,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன் ஜே.பி. டுமினி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 35 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com