கேஎல் ராகுல் அதிரடி: டெல்லி அணி 203 ரன்கள் குவிப்பு

கொல்கத்தா அணியில் சவுரப் துபே 2 விக்கெட் வீழ்த்தினார்.
கேஎல் ராகுல் அதிரடி: டெல்லி அணி 203 ரன்கள் குவிப்பு
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத் தில் நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட் டல்சுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணியில் அபிஷேக் போரேல் 22 ரன்களில் வெளியேறினார். ஷகீல் பரக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 39 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் சவுரப் துபே 2 விக்கெட் வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com