'பவுன்ஸ் இருக்கு மச்சி' சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல் - வைரலாகும் வீடியோ


பவுன்ஸ் இருக்கு மச்சி சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல் - வைரலாகும் வீடியோ
x

Image Courtey: @BCCI 

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது.

லீட்ஸ்,

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. ஆலி போப் சதம் அடித்தார். ஹாரி ப்ரூக் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் 30 ரன்னில் வெளியேறினார். மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 47 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

இந்நிலையில், நேற்றைய டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கின்போது சாய் சுதர்சனிடம் கே.எல்.ராகுல் தமிழில் பேசினார். நல்ல பவுன்ஸ் (BOUNCE) இருக்கு மச்சி என்று கே.எல்.ராகுல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.



1 More update

Next Story