‘கோலி பல சாதனைகளை முறியடிப்பார்’- சுமித்

கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர் சுமித் தெரிவித்துள்ளார்.
‘கோலி பல சாதனைகளை முறியடிப்பார்’- சுமித்
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்ப முடியாத அளவுக்கு வியப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார். அவர் ஏற்கனவே பல சாதனைகள் படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை அவர் முறியடிக்கப்போவதை நாம் பார்க்கப்போகிறோம். அவர் ரன் குவிக்கும் வேட்கையுடன் பயணிக்கிறார். அதை தடுப்பது கடினம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போது அவரை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதே போல் கேப்டன்ஷிப்பிலும் அற்புதமாக செயல்படுகிறார். என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com