கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் வெற்றி... புள்ளிப்பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @KKRiders
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் தற்போது வரை 54 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் 16 லீக் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் எஞ்சி உள்ளன.
இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தர்மசாலவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோவை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது வரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து இங்கு காணலாம்..!
பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் (15 புள்ளி) உள்ளது. தலா 14 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை மற்றும் குஜராத் அணிகள் முறையே 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் (12 புள்ளி) 5வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து 6 முதல் 10 இடங்கள் வரை முறையே கொல்கத்தா (11 புள்ளி), லக்னோ (10 புள்ளி), ராஜஸ்தான் (6 புள்ளி), ஐதராபாத் (6 புள்ளி), சென்னை (4 புள்ளி) அணிகள் உள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி விட்டன.
| தரவரிசை | அணிகள் | புள்ளிகள் | ரன்ரேட் |
| 1 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 16 | +0.482 |
| 2 | பஞ்சாப் கிங்ஸ் | 15 | +0.376 |
| 3 | மும்பை இந்தியன்ஸ் | 14 | +1.274 |
| 4 | குஜராத் டைட்டன்ஸ் | 14 | +0.867 |
| 5 | டெல்லி கேப்பிடல்ஸ் | 12 | +0.362 |
| 6 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 11 | +0.249 |
| 7 | லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் | 10 | -0.469 |
| 8 | 6 | -0.718 | |
| 9 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 6 | -1.192 |
| 10 | சென்னை சூப்பர் கிங்ஸ் (E) | 4 | -1.117 |






