

கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மாலை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத் தில் நடைபெறும் ஆட்டத்தில் முன் னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந் தித்தன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி , கார்த்திக் தியாகி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 19.4 ஓவர்களில் 161 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட்ட நிலையில் ரிங்கு சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்க விட்டு வெற்றி பெற செய்தார்.கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், 2026 தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.