சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

சென்னை அணியில் நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா
Published on

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் செய்தது.

தொடக்கத்தில் ரஹ்மதுல்லா குர்பாஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார் . மறுபுறம் அதிரடி காட்டிய சுனில் நரேன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து வந்த ரஹானே சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 48 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் ரசல் 38 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களும் எடுத்தனர் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 179 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com