சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் குலசேகரா அறிவிப்பு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் குலசேகரா அறிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் குலசேகரா அறிவிப்பு
Published on

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் நுவன் குலசேகரா. இலங்கை அணிக்காக 184 போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான குலசேகரா, 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை. கடைசி கட்டத்தில் ஓரளவு பேட்டிங் செய்யும் திறமையும் கொண்டிருந்த குலசேகரா, பேட்டிங்கில் அதிகபட்சமாக 73 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்துள்ளார்.

37 வயதான குலசேகரா சர்வதேச போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களில் ஒருவரான மலிங்கா வங்காளதேசத்துக்கு எதிரான ஒரே ஒருநாள் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், குலசேகராவும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com