சென்னை அணியில் இணைந்த குல்திப் யாதவ்

மாற்று வீரராக குல்திப் யாதவை சென்னை அணி அறிவித்துள்ளது.
சென்னை அணியில் இணைந்த குல்திப் யாதவ்
Published on

சென்னை,

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் முதல் 5 போட்டிகளில் விளையாடிய கலீல் அகமது காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். சென்னை அணி அவருக்கு மாற்று வீரரை அறிவிக்காமல் இருத்தது.

இந்த நிலையில், கலீல் அகமதுவுக்கு மாற்று வீரராக குல்திப் யாதவை சென்னை அணி அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com