கேப்டனாக இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுப்பார் - பாண்டியாவை புகழ்ந்த குமார் சங்ககாரா

இந்தியா- இலங்கை அணிகள் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.
Image Courtesy : Twitter @hardikpandya7
Image Courtesy : Twitter @hardikpandya7
Published on

இந்தியா- இலங்கை அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் ஜனவரி 3 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இந்த தொடருக்கான டி20 கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ நியமித்துள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் குறித்து இலங்கையின் முன்னாள் மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

கேப்டன்ஷிப்பை மாற்றுவது, புதிய கேப்டனின் கீழ் விளையாடுவது என்பது எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். ஆனால், ஹர்திக் பாண்ட்யா மிக எளிதாக தனது புதிய கேப்டன் பொறுப்பை கையாள்வார் என்று கருதுகிறேன். கேப்டன்ஷிப் மாற்றம் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது. அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின் போது சிக்கல்களை சந்தித்துள்ளன. ஆனால், ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய லீக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். தனது முதல் சீசனில் ஹர்திக் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது குஜராத்.

அணியின் அறிமுகப் போட்டியிலும், கேப்டனான முதல் போட்டியிலும் ஹர்திக் அபாரமாக செயல்பட்டு அணியை ஐபிஎல் சாம்பியனாக்கினார். அதைத் தொடர்ந்து, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான கேப்டனாகவும் ஹர்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தொடரை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com