இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் தகவல் தொடர்பு குறைபாட்டால் சாதகமான முடிவு கிடைக்கவில்லை - ஸ்ரேயாஸ் அய்யர்

தற்போது நடந்து வரும் டி20உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கவில்லை
Image : PTI 
Image : PTI 
Published on

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால் தற்போது நடந்து வரும் டி20உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்ரேயாஸ் அய்யர் தனது யுடியுப் சேனலில் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில்,

'50 ஓவர் உலகக் கோப்பை எனக்கு பிரமாண்டமாக (2 சதத்துடன் 530 ரன்) அமைந்தது. அதன் பின்னர் எனது உடலில் சில பகுதியை வலிமைப்படுத்திக் கொள்ள ஓய்வு எடுத்துக் கொண்டேன். அந்த சமயம் எனக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பில் ஏற்பட்ட குறைபாடுகளால், சில முடிவுகள் எனக்கு சாதகமாக அமையவில்லை. எது எப்படி இருந்தாலும் சிறப்பாக பேட்டிங் செய்து கோப்பை வெல்வது எனது கடமையாகும். ரஞ்சி கோப்பை (மும்பை அணிக்காக) மற்றும் ஐ.பி.எல். தொடரை வென்றால் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு சரியான பதிலாக இருக்கும் என்று முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக எல்லாம் நல்லபடியாக நடந்தது' என்றார்.

உள்ளூர் முதல்தர போட்டிகளை விட ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பட்டதாக ஸ்ரேயாஸ் அய்யரை ஒப்பந்தத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் தடாலடியாக நீக்கியது.டி20உலகக்கோப்பை போட்டிக்கான அணித் தேர்வுக்கும் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com