லங்கா பிரீமியர் லீக்: இரண்டாவது முறையாக பட்டம் வென்றது ஜாப்னா கிங்ஸ் அணி

ஜாஃப்னா கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
லங்கா பிரீமியர் லீக்: இரண்டாவது முறையாக பட்டம் வென்றது ஜாப்னா கிங்ஸ் அணி
Published on

ஹம்பந்தோட்டா, பெற்று

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தான் லங்கா பிரீமியர் லீக் முதல் சீசன் நடத்தப்பட்டது.இதில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடர் போன்றே இந்த லீக்கிலும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.கொழும்பு ஸ்டார்ஸ் , டம்புல்லா ஜியாண்ட்ஸ் , கலே கிளாடியேட்டர்ஸ், ஜஃப்னா கிங்ஸ் , கண்டி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று இருந்தன.

இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் காலே கிளாடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அவிஸ்கா பெர்னாண்டோ 41 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார்.

202 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த காலே கிளாடியேட்டர்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜாஃப்னா கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி லங்கா பிரீமியர் லீக்கின் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக தட்டி சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com