இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் இப்ராஹிம் சத்ரான் பேட்டிங்கை தேர்வு செய்தார்
Image : @OfficialSLC
Image : @OfficialSLC
Published on

தம்புள்ளா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி தம்புள்ளாவில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் இப்ராஹிம் சத்ரான் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான்  முதலில் பேட்டிங் செய்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ் , ஹஸ்ரதுல்லா ஜசாய், இப்ராஹிம் சத்ரான் (கேப்டன் ), முகமது இஷாக், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, கரீம் ஜனத், ஷரபுதீன் அஷ்ரப், நூர் அஹ்மத், பரீத் அஹ்மத், வபாதர் மொமந்த்.

இலங்கை அணி: 

பதும் நிசங்கா , குசல் மெண்டிஸ் , குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம , கமிந்து மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, ஹசரங்கா (கேப்டன் ),அகிலா தனஞ்சயா , நுவான் துஷாரா , மதீஷ பதிரனா. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com