ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்ரிக்காவின் டி புருய்ன் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இருந்து தென் ஆப்ரிக்காவின் டி புருய்ன் விலகினார்.
Image Courtesy: @ProteasMenCSA
Image Courtesy: @ProteasMenCSA
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது, கடைசி டெஸ்ட் வரும் ஜன. 4ல் சிட்னியில் துவங்குகிறது.

சமீபத்தில் மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க சார்பில் விளையாடிய தியூனிஸ் டி புருய்ன் தனது மனைவின் முதல் பிரசவத்திற்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். மெல்போர்ன் டெஸ்டில் பேட்டிங் வரிசையில் 3வது இடத்தில் களமிறங்கிய இவர், 12, 28 ரன் எடுத்து ஏமாற்றினார்.

சிட்னி டெஸ்டில், டி புருய்னுக்கு பதிலாக வான் டெர் துசென் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் தேர்வு செய்யப்படலாம்.

இதுகுறித்து தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு வெளியிட்ட அறிக்கையில்,

மனைவியின் பிரசவத்திற்காக சிட்னி டெஸ்டில் டி புருய்ன் பங்கேற்கமாட்டார். அவரது வாழ்க்கையின் இந்த மிக முக்கியமான தருணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் என, தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com