பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் கிராவ்லி சதம் அடித்தார்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் கிராவ்லி சதம் அடித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் கிராவ்லி சதம் அடித்தார்
Published on

சவுதம்டன்,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. ரோரி பர்ன்ஸ் 6 ரன்னிலும், டாம் சிப்லி 22 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 29 ரன்னிலும், ஆலிவர் போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஜாக் கிராவ்லி நிலைத்து நின்று விளையாடி தனது முதலாவது சதத்தை ருசித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பென் ஸ்டோக்ஸ் விலகியதால் அவருக்கு பதிலாக ஜாக் கிராவ்லி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்துள்ளது. ஜாக் கிராவ்லி 171 ரன் களுடனும், ஜோஸ் பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com