இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் - பாக்.அணியை விமர்சித்த முன்னாள் வீரர்


இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் - பாக்.அணியை விமர்சித்த முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 16 Feb 2025 3:01 PM IST (Updated: 16 Feb 2025 3:03 PM IST)
t-max-icont-min-icon

சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.

கராச்சி,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதனை அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதே நியூசிலாந்து அணியை இந்தியாவாக இருந்தால் தோற்கடித்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர் பாசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்தியாவிடம் கற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கும் அவர் அது குறித்து பேசியது பின்வருமாறு:-

"பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத்திடம் 0 செயல்முறைகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் வாரியம் அவர் பக்கம் இருக்கிறது. கராச்சி போன்ற மைதானத்தில் எப்படி நீங்கள் குறிப்பிட்ட பவுலரை எதிர்கொண்டு ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை செய்யாத நீங்கள் கொஞ்சம் மூளையை உபயோகியுங்கள். இதே நியூசிலாந்து அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட விடுங்கள் அப்போது வித்தியாசம் தெரியும். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இறங்கி வந்து அடிக்க மாட்டார்கள் என்பதை தெரிந்தே மிட்சேல் சான்ட்னர் சிறப்பாக பந்து வீசினார்.

அதே பந்துகளை இந்திய வீரர்களிடம் வீசி பாருங்கள். அவர்கள் அதை மைதானத்தின் 3-வது மாடிக்கு பறக்க விடுவார்கள். சமீபத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்தார்கள். அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டை 30, 20 ஓவர்கள் என 2 வகையாக பிரித்துக் கொள்கிறார்கள். 78 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் முதலில் பந்தின் மீது தன்னுடைய கண்களை வைத்து அடித்தார். பொறுமையுடன் நேராக அடிக்கக் கூடிய வீரர்கள் தங்களுடைய கவனத்தை இழக்க மாட்டார்கள்.

அது போன்ற வீரர்கள்தான் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவிப்பார்கள். கில் தனது விளையாடும் விதத்தில் மாற்றங்களை செய்து அசத்துகிறார். முதலில் பேட்டிங் செய்வதும் சேசிங் செய்வதும் வித்தியாசமான விஷயங்கள். பகார் ஜமான் சேசிங் செய்வதில் அசத்துகிறார். ஏனெனில் அவருக்கு முன்னே இலக்கு இருக்கிறது. ஆனால் முதலில் பேட்டிங் செய்யும்போது அவரால் அசத்த முடியவில்லை. கேம் சேஞ்சரான அவர் முதல் 15 - 20 வரை விளையாட வேண்டும்.

இந்திய ஸ்பின்னர்கள் ரன்களை தடுக்க விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்புடன் பவுலிங் செய்கிறார்கள். அதற்காக அழுத்தத்தை உண்டாக்கும் அவர்கள் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டை எடுக்க முயற்சிப்பதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டை எடுக்க முயற்சிக்கிறார்கள். அதுவே வித்தியாசம்" என்று கூறினார்.

1 More update

Next Story