அவரிடம் இருந்து விலைமதிப்பற்ற விஷயங்களை கற்றுக்கொண்டேன் - கோலியை புகழ்ந்த வில் ஜேக்ஸ்

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜேக்ஸ் இடம் பெற்றிருந்தார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

லண்டன்,

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜேக்ஸ் இடம் பெற்றிருந்தார். தொடக்கத்தில் அவருக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியால் அவருக்கு பதிலாக வில் ஜேக்ஸ் அணியில் இடம் பிடித்தார்.

ஆனால் அந்த நிலைமையில் ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற நிலையில் இருந்தது. அந்த நிலையில் களமிறங்கிய வில் ஜேக்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். மேலும் அதில் ஒரு சதத்தையும் வில் ஜேக்ஸ் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியிடம் இருந்து விலைமதிப்பற்ற விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என வில் ஜேக்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நானும், விராட்டும் இணைந்து பேட்டிங் செய்யும்போது அவர் எனக்கு பயிற்சியளிப்பார்.

சேசிங்கில் எப்படி அதிரடியாக ரன்களை குவிப்பது குறித்த விலைமதிப்பற்ற விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் அவருடம் பார்ட்னர்ஷிப்பில் இருந்த விதம் குறித்து நான் மிகவும் பெருமையாக இருந்தேன். இவ்வாறு வில் ஜேக்ஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com