லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்


லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @WclLeague

தினத்தந்தி 29 July 2025 10:30 AM IST (Updated: 29 July 2025 10:30 AM IST)
t-max-icont-min-icon

இன்று மலை 5 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

லீட்ஸ்,

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிய இந்த தொடரில் இன்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று மலை 5 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

அதேவேளையில் ஆறுதல் வெற்றி பெற இந்தியா போராடும் (இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

1 More update

Next Story