லெஜெண்ட்ஸ் லீக் இறுதிப்போட்டி: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுத்ததால் பாகிஸ்தான் விளையாடாமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
image courtesy:twitter/@WclLeague
image courtesy:twitter/@WclLeague
Published on

பர்மிங்காம்,

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்ற 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.

லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான்,தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இருப்பினும் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்ததால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடாமலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com