டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க பரிசீலிப்போம் - தேர்வு குழு தலைவர்

டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க பரிசீலிப்போம் என தேர்வு குழு தலைவர் கூறி உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க பரிசீலிப்போம் - தேர்வு குழு தலைவர்
Published on

புதுடெல்லி,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் ரோகித் சர்மா களம் இறக்கப்படவில்லை. தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். லோகேஷ் ராகுல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே 44, 38, 13, 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் கங்குலி, கும்பிளே உள்ளிட்டோர் வற்புறுத்தினார்கள். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேட்ட போது, வெஸ்ட்இண்டீஸ் போட்டி தொடருக்கு பிறகு தேர்வு குழுவினர் சந்திக்கவில்லை. லோகேஷ் ராகுலின் பார்ம் கவலை அளிக்கிறது. டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்ற கருத்தை நிச்சயம் கருத்தில் கொள்வோம். இது குறித்து நாங்கள் ஆலோசனை செய்வோம் என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com