

திருவனந்தபுரம்,
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக தென்ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்து சேர்ந்தனர்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பில்ட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ஒவ்வொரு முறையும் இந்திய அணியின் போட்டிகள் கேரளாவில் நடைபெறும் போது கேரள ரசிகர்கள் வித்தியாசமான முறையில் ஏதாவது செய்து அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கமாகும்.
அந்த வகையில் முதல் டி20-க்கு முன்னதாக "ஆல் கேரளா விராட் கோலி ரசிகர்கள்" என்ற சங்கம் நாளை போட்டி நடைபெறும் கிரீன்ஃபீல்ட் மைதானத்திற்கு முன்பு கோலியின் மிகப்பெரிய கட்-அவுட்டை வைத்துள்ளனர். அதே போல இந்திய அணியின் கேப்டனின் ரோகித் சர்மாவிற்கும் திருவனந்தபுரத்தில் மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
ஆல் கேரளா ரோகித் சர்மா ரசிகர்கள் சங்கம் சார்பாக இந்த கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. கோலி, ரோகித் ஆகிய இருவரின் கட்-அவுட் குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு கேரளாவில் நாளை இந்திய அணியின் போட்டி நடைபெற இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைத்துள்ளனர்.
View this post on Instagram