

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான் ராகுல் டிராவிட் தேர்வாகியுள்ளார்.
இவர் பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு சுப்மன் கில் தேர்வாகியுள்ளார்.