செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியல்: இந்திய வீராங்கனை மந்தனாவுக்கு இடம்

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள்.
செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியல்: இந்திய வீராங்கனை மந்தனாவுக்கு இடம்
Published on

நியூயார்க்,

டைம் இதழ் ஆண்டுதோறும் உலகில் செல்வாக்குமிக்க, புகழ்பெற்ற 100 பேர் பட்டியலை வெளியிடுகிறது. அரசியல், கலை, அறிவியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு போன்ற துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள்.

இந்த நிலையில் டைம் இதழின் 2026-ம் ஆண்டுக்கான டாப்-100 செல்வாக்கு மிக்க விளையாட்டு ஆளுமைகள் பட்டியலில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா இடம் பிடித்துள்ளார்.

பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (17) அடித்தவர் மந்தனா ஆவார். கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதில் முக் கிய பங்கு வகித்தார். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பவுமா, கால்பந்து வீரர்கள் மெஸ்சி, ரொனால்டோ, டென்னிஸ் வீரர் கார் லஸ் அல்காரஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இதில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com