நடப்பு ஐபிஎல்-லில் வேகமான பந்தை வீசிய பெர்குசன் - உம்ரான் மாலிக் சாதனை முறியடிப்பு

உம்ரான் மாலிக்கின் சாதனையை பெர்குசன் முறியடித்துள்ளார்.
Image Courtesy : IPL/BCCI 
Image Courtesy : IPL/BCCI 
Published on

அகமதாபாத்,

குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் குஜராத் அணியின் வேக பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 157.3 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் அவர் இந்த ஐபிஎல் சீசனின் வேகமான பந்தை வீசி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஐதராபாத் அணியின் இளம் வேகம் உம்ரான் மாலிக் டெல்லி அணிக்கு எதிராக 157 கி.மீ வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது பெர்குசன் (157.3 கி.மீ) அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com