20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் இறங்குவார் - ரோகித் சர்மா உறுதி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக தன்னுடன் இணைந்து லோகேஷ் ராகுல் களம் இறங்குவார் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் இறங்குவார் - ரோகித் சர்மா உறுதி
Published on

மொகாலி,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மெகாலியில் நாளை (இரவு 7.30 மணி) நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரராக அடியெடுத்து வைத்த விராட் கோலி சதம் விளாசினார். அதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து தொடக்க வீரர் வரிசை குறித்து நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஆலோசனை மேற்கொண்டோம். வரும் தொடர்களில் ஏதாவது சில ஆட்டங்களில் கோலி தொடக்க வீரராக இறக்கப்படலாம். ஏனெனில் அவர் தான் எங்களது 3-வது தொடக்க ஆட்டக்காரராக இருக்கிறார்.

அதே சமயம் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் எங்களது தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் என்னுடன் இணைந்து இறங்குவார். அந்த வரிசையில் உலக கோப்பை போட்டியில் அதிகமான பரிசோதனை முயற்சிகளை செய்யமாட்டோம். இந்திய அணிக்காக ராகுலின் செயல்பாடு கவனிக்கப்படுவதில்லை. அவர் இந்தியாவின் மிகவும் முக்கியமான வீரர். கடந்த 2-3 ஆண்டுகளில் அவரது சாதனைகளை உற்று நோக்கினால், மிக நன்றாக இருப்பது தெரியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com