என்னை குணப்படுத்தும் பயணத்தின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன் - உடல்தகுதி குறித்து ஷமி பதிவு

கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது முகமது ஷமிக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
என்னை குணப்படுத்தும் பயணத்தின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன் - உடல்தகுதி குறித்து ஷமி பதிவு
Published on

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 33 வயதான முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தொடரின் போது அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

அவருக்கு கடந்த மாதம் இறுதியில் லண்டனில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்தது. இந்த நிலையில் காயத்தன்மை குறித்து அவர் நேற்று எக்ஸ் பக்கத்தில், 'எனது உடல்நலம் தேறிவருவதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டு 15 நாட்கள் ஆகிறது. சமீபத்தில் தையல்கள் பிரிக்கப்பட்டன. மேலும் என்னை குணப்படுத்தும் பயணத்தின் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com