டெல்லி அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

டெல்லி அணியில் நடராஜன் , லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.



டெல்லி அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ
Published on

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதில் லக்னோவில் இன்றிரவு நடக்கும் 5-வது லீக்கில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, அக் ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அப்துல் சமத் 36 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 35 ரன்களும் எடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெல்லி அணியில் நடராஜன் , லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com