குஜராத் அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.


குஜராத் அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ
Published on

லக்னோ,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக் கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ - குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் லக்னோ அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. லக்னோ அணியில் மார்க்ரம் மட்டும் பொறுப்புடன் விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com