ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

2026 ஐபிஎல் தொடருக்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன.
ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
Published on

லக்னோ,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர் முடிவடைந்த பின்னர், ஐபிஎல் அணியின் முகாம்களில் பங்கேற்பார்கள். உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்காத வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, வீரர்களுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. லக்னோ அணியில் ரிஷப் பண்ட் உடன் மார்க்கிராம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் முகமது ஷமி, நோர்ஜே உள்ளிட்ட அனுபவ வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com