ஐபிஎல்: லக்னோ - குஜராத் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல்: லக்னோ - குஜராத் இன்று மோதல்
Published on

லக்னோ,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணிகள் மோத உள்ளன.

லக்னோ மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. 3 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

3 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் 1 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com