ஐபிஎல்- டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Image Courtesy : Twitter @IPL
Image Courtesy : Twitter @IPL
Published on

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ள 45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். நண்பகல் ஆட்டங்களில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் பேட்டிங்கை தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com