சந்திர கிரகணத்தின்போது பயிற்சியைத் தவிர்த்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.
சந்திர கிரகணத்தின்போது பயிற்சியைத் தவிர்த்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
Published on

மும்பை,

2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதும் அதே வேளையில், இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.

முதல் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்னில் நடக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி இரவு 7 மணிக்கும் தொடங்குகிறது.

Also Read
காரில் வேகமாக சென்ற தோனிக்கு அபராதம் விதிப்பு
சந்திர கிரகணத்தின்போது பயிற்சியைத் தவிர்த்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இதற்கிடையில், சந்திர கிரகணம் நிகழ்வின்போது பயிற்சியில் ஈடுபடுவதை இந்திய அணி வீரர்கள் தவிர்த்தது கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமாக மாலை 6 மணிக்கு பயிற்சி தொடங்கும் இந்திய அணி வீரர்கள், நேற்று சந்திர கிரகணம் மாலை 6.47 மணிக்கு முடிந்த பின்னர், இரவு 7 மணிக்குப் பயிற்சியைத் தொடங்கி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com