

தர்மசாலா,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
தற்போது இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இமாச்சலபிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்க இருந்தநிலையில், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மழை நின்றதால் போட்டி தொடங்க உள்ளது. போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்கிறது.
இந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியில் 2 இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் ப்ரார் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கி உள்ளனர்.