பெங்களூருவுக்கு எதிரான ஆட்டம்: டெல்லி அணியில் களமிறங்கும் பாப் டு பிளெஸ்சிஸ்..?


பெங்களூருவுக்கு எதிரான ஆட்டம்: டெல்லி அணியில் களமிறங்கும் பாப் டு பிளெஸ்சிஸ்..?
x

image courtesy:PTI

காயம் காரணமாக நடப்பு சீசனில் சில போட்டிகளை டு பிளெஸ்சிஸ் தவறவிட்டார்.

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டெல்லி அணியில் துணை கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு சீசனில் சில போட்டிகளை காயம் காரணமாக தவறவிட்ட அவர் மீண்டும் களமிறங்க உள்ளது டெல்லி அணிக்கு நிச்சயம் வலுவானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

1 More update

Next Story